அமைச்சர் உதயநிதியை கண்டித்து மறியல்; இந்து முன்னணியினர் 28 பேர் கைது


அமைச்சர் உதயநிதியை கண்டித்து மறியல்; இந்து முன்னணியினர் 28 பேர் கைது
x

அமைச்சர் உதயநிதியை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்திற்கு காரைக்குடியில் இந்து முன்னணி கட்சியின் சார்பில் ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரைக்குடி வடக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் போலீசார் அனுமதியை மீறி இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமையில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், நகர தலைவர் பாண்டியன், பொதுச்செயலாளர்கள் பழனிக்குமார், மாரியப்பன், மாவட்ட செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் நாச்சியப்பன், நகர செயலாளர் பழனியப்பன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, கலை கலாசார நகர தலைவர் கண்ணன், தேவகோட்டை நகர தலைவர் சுரேஷ், பொருளாளர் நிகராராணி உள்பட 28 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story