போலீசாரை கண்டித்து கருப்புக்கோடி ஏந்தி போராட்டம்


போலீசாரை கண்டித்து கருப்புக்கோடி ஏந்தி போராட்டம்
x

கம்பத்தில் போலீசாரை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.

தேனி

இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில், கம்பம் நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடந்தது. இதில் இந்து முன்னணியினருக்கு மட்டும் ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினருக்கு சிலைகளை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு கம்பம் சுப்பிரமணியர் சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் விநாயகர் சிலையுடன் விழா கமிட்டியினர் கருப்புக்கொடி ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில், அனுமதியின்றி பொது இடங்களில் வைத்திருந்ததாக 18 விநாயகர் சிலைகளை இரவோடு இரவாக போலீசார் மினிலாரிகளில் ஏற்றினர். பின்னர் அந்த சிலைகளை, காமயகவுண்டன் பட்டி முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர். இதனால் கம்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story