ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்


ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்  போராட்டம்
x

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் தேவா, சி.ஐ.டி.யு. போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் திருமலை ஆகியோர் வாழ்த்தி பேசினார். ஆட்டோவுக்கு ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். பெர்மிட் எல்லை தாண்டினால் விதிக்கப்படும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கோரிக்கைகள் குறித்து மண்டல ஆணையரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.



Next Story