ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் அங்கன்வாடி சத்துணவு, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் புஷ்பரர் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் ஜெனிஸ்டா, மண்டல செயலாளர் பவுல்ராஜ், ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரபாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட இணைச்செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.