ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2022 7:30 PM GMT (Updated: 3 Nov 2022 7:31 PM GMT)

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓய்வூதியர் சங்கம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். நிர்வாகிகள் திருநாவுக்கரசு, வெங்கடேசன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்கம் குணசேகரன் நிறைவுரை ஆற்றினார். இணை செயலாளர் பவுன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும். அனைத்து நோய்களுக்குமான முழுமையான செலவு தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில, அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும். நிலுவைத் தொகை பிடித்தமின்றி வழங்க வேண்டும். காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும். 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயாகவும், கடைசி ஊதியத்தில் 50 சதவீதமாகவும் வழங்க வேண்டும். மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story