கழிவுநீர் ஓடையை தூர்வார கோரி போராட்டம்


கழிவுநீர் ஓடையை தூர்வார கோரி போராட்டம்
x

கழிவுநீர் ஓடையை தூர்வார கோரி போராட்டம்

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே கிழவன்கோவில் கிராமத்திலிருந்து சங்கரபாண்டியபுரம் வழியாக சமுசிகாபுரம் வரை செல்லும் கழிவுநீர் ஓடையில் குப்பை மற்றும் கழிவுகள் தேங்கி உள்ளது. இந்த நிலையில் வாருகால் நிறைந்து கழிவுநீர் சாலையில் ஓடியதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அப்பகுதியில் செயல்படும் மருத்துவத் துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் சுடுதண்ணீர் கலந்து சாலையில் ஓடியதால் அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சமுசிகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி மற்றும் தெற்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.


Next Story