ராமேஸ்வரம் மீனவப் பெண் கொலை வழக்கு; நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!


ராமேஸ்வரம் மீனவப் பெண் கொலை வழக்கு; நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
x

ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர்.

இந்நிலையில் மீனவ பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வடமாநில இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story