லாரிகளுக்கு மணல் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்


லாரிகளுக்கு மணல் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
x

லாரிகளுக்கு மணல் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்த உரிமையாளர்கள் கூறினர்.

கரூர்

மணல் லாரி உரிமையாளர்கள்

கரூர் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சார்பில் நேற்று கரூர் நொய்யல் இல்லத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கரூர் மாவட்ட மணல் லாரி உரிமையாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கரூர் மாவட்டத்தில் இயங்கி கொண்டிருந்த நன்னியூர் மற்றும் கணபதிபாளையம் மணல் குவாரிகளை மீண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உள்ளோம். சில லாரிகளுக்கு மணல் வழங்க உறுதிப்படுத்தி உள்ளது என தகவல் வந்துள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

அந்த லாரிகளுக்கும் மணல் வழங்குமாறு லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க மணல் வழங்க வேண்டும். அதற்குமேல் கரூர் டர்ன் பாயிண்ட் நாவல்நகரில் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு எந்த தகவல்களும் தெரியப்படுத்தவில்லை.எனவே நீர்வளத்துறை மணல் எடுப்பாளர்களுக்கு உரிமை வழங்குமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எங்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்தப்படும்

பின்னர் மணல் லாரி உரிமையாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 12-ந்தேதி மணல் லாரிகளுக்கு மணல் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தவறும்பட்சத்தில் அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கரூர் மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.


Next Story