கிராம மக்கள் உண்ணாவிரதம்


கிராம மக்கள் உண்ணாவிரதம்
x

மின்வாரியத்தை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மின் வயர்கள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பம், வயர்கள் எதுவும், மாற்றாமல் அப்படியே உள்ளன. மிகப்பழமையான டிரான்ஸ்பார்மர் என்பதால் இதன் மூலம் மின் வினியோகம் சரியாக கிடைப்பதில்லை.இதனால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்கம்பங்கள் மிகவும் சாய்ந்த நிலையில், உள்ளதால் மின் வயர்கள் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் மின் கம்பங்களின் அடிப்பகுதி மிகவும் சேதமாக உள்ளது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து வருகின்றனர். இதனை சரி செய்யக்கோரி இப்பகுதி மக்கள்பெருநாழி மின்வாரியத்திற்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மின் வாரிய அலுவலர்கள், அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை என்றும் கூறுகின்றனர். எனவே பெருநாழி மின்வாரியத்தை கண்டித்து நாளை (5-ந் தேதி) மின் வாரிய அலுவலகம் முன்பு, காட மங்கலம் ஊராட்சி மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில், பெருநாழி போஸ் தலைமையில், ஊராட்சி தலைவர் காளி, துணைத் தலைவர் ருக்மணி முன்னிலையில், உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை மேலும் நீடித்தால், சாலைமறியலில் ஈடுபடுவோம் என்று கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story