நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமேசுவரத்தில் முக்கிய பகுதியான வேர்க்கோடு முதல் திட்டக்குடி சந்திப்பு சாலை, மற்றும் ராம தீர்த்தம் சீதா தீர்த்தம் வரையிலும் பல மாதங்களாக மிகவும் மோசமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் ராமேசுவரத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிதாக வீடு கட்ட இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்கவேண்டும்.

நகராட்சியின் மீது மாவட்ட நிர்வாகம் நேரடி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண் இளங்கோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரேம், நகர் ஒருங்கிணைப்பாளர் காளிவேல், இளம் பாசறை தமிழ்மணி, நகர் பொருளாளர் ராசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சபரி ராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் சூசை ராஜ், வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் எட்வின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story