பாடைகட்டி தூக்கி வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாடைகட்டி தூக்கி வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சுடுகாட்டுக்கு பாதை வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து வந்தவாசியில் பாடைகட்டி தூக்கி வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

சுடுகாட்டுக்கு பாதை வசதி செய்து தராத நகராட்சியை கண்டித்து வந்தவாசியில் பாடைகட்டி தூக்கி வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வந்தவாசி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டுக்கு பாதை வசதி செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்த அவர்கள் பாடை ஒன்றை கட்டி தூக்கி வந்து நகராட்சி அலுவலகம் முன் கோஷமிட்டனர்.

மேலும் தலித் மக்களின் அடிப்படை தேவைகளை வந்தவாசி நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை தாங்கினார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலாளர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார். மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். ஆர்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story