வலுக்கும் எதிர்ப்புகள்: கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


வலுக்கும் எதிர்ப்புகள்: கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
x

கவர்னருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கவர்னர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துவிட்டார்.இதனால், கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அவர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ஆர்.என்.ரவி கோபத்தில் அவையை விட்டு வெளியேறினார். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கவர்னரின் இந்த செயல்பாடுகளை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story