மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்


மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டத்தில் விபத்து மற்றும் பிற காரணங்களால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் 9 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு செயற்கை கால்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 9 மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பிலான செயற்கை கால்களை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் வைத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இதில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை கலெக்டர் சைபுதீன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story