பொதுமக்கள் சாலைமறியல்


பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Nov 2022 1:00 AM IST (Updated: 7 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

தார்சாலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த நடுப்பட்டி ஊராட்சி தளவாய்பட்டி எலத்தூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எலத்தூர் பகுதியில் இருந்து தளவாய்பட்டி வழியாக வரும் தார் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தளவாய்பட்டி எலத்தூர் இடையே தனியார் நிறுவனம் ரோட்டை வெட்டியதாக தெரிகிறது. இதனை சரி செய்து கொடுக்க கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ஜுனன், ஒன்றிய செயலாளர் வேலு பாண்டியன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story