ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

ஒதுக்கீடு செய்த இடத்தில் வீட்டுமனை வழங்கக்கோரி ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி நீர்நிலை புறம்போக்கு என்பதால் அங்கு குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 1.30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இருப்பினும் அந்த நிலத்தை பிரித்து கொடுக்காமல் கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் பட்டா வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் ஓமலூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் வீட்டுமனையை பிரித்து வழங்க கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story