பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்


பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
x

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் தாலுகா பெருமத்தூரில் (வடக்கு) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா காரையில் உதவி ஆணையர் (கலால்) ஷோபா தலைமையிலும், பெரம்பலூர் தாலுகா செங்குணத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) சிவசங்கரன் தலைமையிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடந்தன.

முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

1 More update

Next Story