திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

நிதி உதவி

அதை தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம் அடைந்தவர்களின் ஈம சடங்கிற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.85 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளை வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்திரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

1 More update

Next Story