அரசு அனுமதித்துள்ள நேரத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்


அரசு அனுமதித்துள்ள நேரத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்
x

அரசு அனுமதித்துள்ள நேரத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசு தீபாவளி பண்டிகை தினமான இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து விபத்தில்லா மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story