அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்


அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜய் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செந்தில், நிர்வாகிகள் மணிவேல், சடகோபன், பாலு, பிரபு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story