ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர்


வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம், குட்டை மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. அதன்படி ஊசூர் அடுத்த அத்தியூர் ஆட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. மழைநீர் வெளியே செல்ல வழியில்லாததால், அந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story