புதுக்கோட்டை பா.ஜனதா பிரமுகர் கைது


புதுக்கோட்டை பா.ஜனதா பிரமுகர் கைது
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து முகநூலில் பதிவு செய்த புதுக்கோட்டை பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

முகநூலில் பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் பா.ஜனதாவில் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக வலைத்தள அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கமலக்கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. மாணவர் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை (29) நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது

இதேபோல வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் வீரய்யா புகார் அளித்தார். இதையடுத்து இரு போலீஸ் நிலையங்களிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.


Next Story