வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கரூர்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் முகாம் நடைபெற்றது. குளித்தலை கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார். வீரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். முகாமில் வீரியபாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து ஏராளமானோர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பொதுமக்களுக்கு வெறிநாய் கடி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முன்னதாக கால்நடை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story