மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x

மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே கோவிலூரில் கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் அழகுமுத்து கோன் குரு பூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கோவிலூர்-மானகிரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 41 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை குமரெட்டையாபுரம் மகாவிஷ்ணு மற்றும் மருங்கூர் அப்துல்காதர் வண்டியும், 3-வது பரிசை கள்ளந்திரி சிவபிரபு வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 29 வண்டிகள் கலந்து கொண்டு 2 பிரிவாக நடைபெற்றது. இதில் முதல் பிரிவில் முதல் பரிசை கோவிலூர் சிதம்பரம் மற்றும் கல்லல் உடையப்பா வண்டியும், 2-வது சித்திரங்குடி ஆம்.ஜி.ஆர். வண்டியும், 3-வது பரிசை பாகனேரி பிரதாப்வெள்ளையப்பன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 2-வது பரிசை சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல் வண்டியும், 3-வது பரிசை பூக்கொல்லை ரித்தீஷ்வரன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் காளைகளுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story