டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி


டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி
x

கன்னியாகுமரியில் இருந்து பாதை யாத்திரை செல்ல சென்னை வந்த ராகுல்காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை:

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை நாளை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் ராகுல்காந்தியை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.பி. ஜெ.எம். ஆரூண், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை தந்து வரவேற்றனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி காரில் ஏறி பரங்கிமலையில் உள்ள நட்சத்திர ஒட்டலுக்கு சென்றார்.

சென்னை ஒட்டலில் தங்கும் ராகுல் காந்தி நாளை காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜுவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்து காரில் சென்னை திரும்பிகிறார். காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

ராகுல்காந்தி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story