பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல்காந்திதான் காங்கிரஸ் தலைவர் - கே.எஸ்.அழகிரி
பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல்காந்திதான் காங்கிரஸ் தலைவர் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
மோடியின் கொள்கைகள் தவறானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதனை தமிழகம் ஒன்றாக நின்று சுட்டிக்காட்டி, மதசார்பற்ற கூட்டணிக்கு பெருவாரியான வெற்றிகளை தந்ததுபோல, இந்த முறையும் தர வேண்டும். நமது கருத்தியல் தொடர்பான பிரசாரங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும். திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்ல வேண்டும்.
வர உள்ள நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பிரச்சினை இருப்பதாக பா.ஜ.க. மாயையை உருவாக்குகிறது. ராகுல்காந்தியின் தலைமையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. லட்சிய பாதையை அடைவதற்காக அவர் கடுமையாக உழைக்கிறார். பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோரும் பேசினர்.