ராகுல் காந்தி பாதயாத்திரையால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை - ஜி.கே.வாசன்


ராகுல் காந்தி பாதயாத்திரையால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை - ஜி.கே.வாசன்
x

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என ஜி.கே.வாசன் கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ஜி.கே.வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சொத்து வரியை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 19-ந் தேதி த.மா.கா. சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்களின் மீது அக்கறை செலுத்தாத அரசாக திமுக அரசு உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மீனவர்கள் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் மீனவர் பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகள் அக்கறை செலுத்தாதது வருத்தம் அளிக்கிறது.

வெளி மாநிலத்தவர் அதிகமாக வந்து செல்லும் ராமேசுவரத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமடைந்துள்ளது. இதனால் ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார்.

அவரது நடைபயணத்தால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. திமுக அரசு காழ்புணர்வோடு செயல்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. திராவிட மாடலால் எந்த மாற்றமும் ஏற்படாது. திமுக ஆட்சியில் மக்களின் எண்ணங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதன் வெளிபாடு தேர்தல் முடிவில் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story