விழுப்புரத்தில்ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை தட்சிண ரெயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைந்தபட்ச அடிப்படை ஊதியமே ரூ.18 ஆயிரமாக உள்ள சூழலில் போனஸ் கணக்கிட பயன்படுத்தும் ரூ.7 ஆயிரம் என்னும் உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும், உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் கிளை செயலாளர் ஈஸ்வரதாஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் சவுந்தர்ராஜன், பலராமன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story