ரெயில் நிலையத்தில் மாணவியை கொலை செய்த வழக்கு - கைதான சதீஷுக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு


ரெயில் நிலையத்தில் மாணவியை கொலை செய்த வழக்கு - கைதான சதீஷுக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு
x

சிறையில் கொலையாளி சதீஷை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சதீஷை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சதீஷ் சிறையில் இரவு முழுவதும் உறங்காமல் புலம்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சத்யப்பிரியாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்திருந்ததாக ஏற்கனவே சதீஷ் போலீசிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதீஷுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கொலையாளி சதீஷை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவரை கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சதீஷுக்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story