சென்னையில் மழை.. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி


சென்னையில் மழை.. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Nov 2023 8:59 AM IST (Updated: 4 Nov 2023 9:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. இதன்காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் முழங்கால் அளவு நீர் தேங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்துடன், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவேண்டும் என பொதுமக்கள் மட்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் சாலை, ராயப்பேட்டை ஜிபி சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.


Next Story