திருச்சி, மணப்பாறையில் மழை


திருச்சி, மணப்பாறையில் மழை
x

திருச்சி, மணப்பாறையில் மழை பெய்தது.

திருச்சி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால் திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்தது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. கடந்த சில நாட்களாக வெயிலில் வாடிய திருச்சி மக்கள், நேற்று பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்று வீசியதுடன் லேசான தூரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்று, இடி மின்னலுடன் பெய்யத்தொடங்கி, பின்னர் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது. தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. கன மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story