மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் - மநீம வலியுறுத்தல்
மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சென்னையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிந்த இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன், ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், சக ஊடகத்தினருக்கும் மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முற்றுப்பெறாமல் உள்ளன. இப்பணிகளானது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் "வருமுன் காக்கும்" நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.