மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

அரியலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூரில் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்து பல்வேறு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். ஊர்வலமானது அரசு தொழிற் பயிற்சி நிலையம், பல்துறை வளாக அலுவலகம் வழியாக சென்று அரியலூர் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வீடியோவை பார்வையிட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், என்றார். இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி செயற்பொறியாளர் சுகுணராஜ், உதவி பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் கண்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story