'அன்பிற்கினிய நண்பர் சூப்பர் ஸ்டார்' - ரஜினிகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


அன்பிற்கினிய நண்பர் சூப்பர் ஸ்டார் - ரஜினிகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x

Image Credits : twitter.com/mkstalin

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் ரஜினிகாந்த். இவரின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் ஆகிய 6 மொழிகளில் 169 படங்களில் நடித்து உலகம்முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக மத்திய அரசு 2000ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி சிறப்பித்தது. மேலும் சினிமா துறையில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக 2019ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றி படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story