ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தனுஷ்கோடி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தனுஷ்கோடி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நினைவு தினம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் வக்கீல் அணி மாநில இணை தலைவர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், உதயகுமார், பரணி இசக்கி, மானூர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடங்குளம்
கூடங்குளத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பிரசன்னகுமார், பொன் பாண்டி நாடார், நடராஜன், சிவாஜி வி.கைலாஷ், காங்கிரஸ் தியாகி வருவேல் நாடார், செல்லகுமார், ஆபிரகாம் மைக்கிள் ராஜ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், சிவாஜி பிரபு, விக்ரம் பிரபு ரசிகர்கள் கலந்துகொண்டனர்.