2 சரக்கு வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்;2 பேர் கைது
மதுரையில் 2 சரக்கு வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் 2 சரக்கு வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் வலையங்குளத்தை அடுத்த சோளங்குருணி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு வண்டியில் 480 கிலோ ரேஷன் அரிசியும், மற்றொரு வண்டியில் 480 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த சங்கிலிகருப்பன், அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 சரக்கு வாகனத்தையும், 880 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.