பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது - மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல்


பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது - மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல்
x

அனைத்து கோவில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

பழனி முருகன் கோவிலில் பணம் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது தராததால் அதிக விலைக்கும், அளவு குறைவாகவும் சிலர் விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதாகவும் கூறி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் பழனி முருகன் கோவிலிலும் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சமிர்தத்திற்கு ரசீது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து முறையான ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Next Story