உத்திரமேரூரில் மாயமான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு


உத்திரமேரூரில் மாயமான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
x

உத்திரமேரூரில் மாயமான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் எடமைச்சி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். கொத்தனார். இவரது மனைவி பூங்கோதை (வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 10-ந்தேதி முதல் பூங்கோதையை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மாயமானது குறித்து பத்மநாபன் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து மாயமான பூங்கோதையை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இடமச்சி கிராமம் சுடுகாடு அருகே உள்ள முட்புதரில் வேப்பமரத்தில் அழுகிய நிலையில் பிணம் தொங்குவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிவகுமார் சாலவாக்கம் போலீசில் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில் பிணமாக தொங்கியவர் மாயமான பூங்கோதை என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக நரம்புத்தளர்ச்சிக்கு பூங்கோதை சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

மன உளைச்சலில் அவர் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story