செலவுக்கு பணம் தர மறுத்தபூக்கடை ஊழியரை பிளேடால் கிழித்த உறவினர் கைது

செலவுக்கு பணம் தர மறுத்த பூக்கடை ஊழியரை பிளேடால் கிழித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் மணிகண்டன் (வயது 23). சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் சிவா (28). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். மணிகண்டன், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று விழுப்புரம் வந்த சிவா, மணிகண்டனிடம் சென்று செலவுக்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, மணிகண்டனை திட்டி தாக்கியதோடு பிளேடால் அவரது இடதுகழுத்தில் கிழித்தார். இதில் காயமடைந்த மணிகண்டன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மணிகண்டன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.