மண்டல அளவிலான ஆணழகன் போட்டி; தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் வெற்றி


மண்டல அளவிலான ஆணழகன் போட்டி; தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் வெற்றி
x

பழனியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆணழகன் போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் சங்கம் சார்பில், மண்டல அளவிலான ஆணழகன் போட்டி பழனியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, தூத்துக்குடி, சேலம், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 160 பேர் கலந்துகொண்டனர். 55, 60, 65, 70, 75, 80, 85 ஆகிய 7 பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் தங்களது கட்டுமஸ்தான உடல் அசைவுகளை செய்து அசத்தினர். பின்னர் ஒவ்வொரு பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்தந்த பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த லோகேஷ்வர் முதலிடம் பிடித்தார். தேனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 2-ம் இடமும், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா 3-ம் இடமும் பிடித்தனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story