பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடக்கம்
தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர படிப்புகளில் சேருவோரும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story