மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசன வசதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு


மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசன வசதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு
x

நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

சென்னை,

பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்கு இன்று முதல் நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கான உத்தரவை நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.


Next Story