தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்


தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ விபத்தில் வீடுகளை இழந்த ரமாமூர்த்தி, மணிகண்டன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேருக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினார். அப்போது தாசில்தார் ராஜி, திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், நிர்வாகி குணசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story