இடமாற்றம்


இடமாற்றம்
x

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் இடமாற்றம்

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் காளிராஜ். போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் ராமர்பாண்டி, சுவாதிராஜ்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், போலீஸ்காரர்கள் ராமர்பாண்டி, சுவாதிராஜ் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்திற்கும் பணி இடமாற்றம் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனிப்பிரிவுக்கு வந்ததாகவும், இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story