பாஜக கொடி கம்பம் அகற்றம்... சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது


பாஜக கொடி கம்பம் அகற்றம்... சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது
x

பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர். இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றிய காவல்துறையை கண்டித்து மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வள்ளியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பாஜக-வினரை போலீசார் கைது செய்தனர்.


Next Story