காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்


காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு வந்தது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு வந்தது.

பயணிகள் நிழற்குடை

காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு 12 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இந்த நிழற்குடையில் நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நிழற்குடையில் பஸ்கள் வர முடியாமல் ஆக்கிரமிப்புக்கள், நடைபாதை கடைகள் இருந்ததால் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் இருந்தது.

ஆக்கிரமிப்பு

இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து பயணிகள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதையடுத்து காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் நிழற்குடை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த கலெக்டர் ஜெயசீலன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story