சிங்கப்பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


சிங்கப்பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட பெரிய விஞ்சியம்பாக்கம் பெரியார் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. தற்போது பெய்த கனமழையால் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாததால் இந்த இடத்தில் எப்போதும் தண்ணீர் சூழ்ந்து நிற்கும். மேலும் செட்டி புண்ணியம், வடகால் செல்பவர்கள் இந்த பெரிய விஞ்சியம்பாக்கம் ரெயில்வே கேட் வழியாக கடந்து சீக்கிரம் வீட்டுக்கு செல்ல முடியும். அதுவும் இந்த தெருவின் திருப்பத்திலேயே அதாவது அபாயகரமான வளைவில் குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மோட்டார் சைக்கிளில் யாரேனும் வந்தால் இந்த தண்ணீரில் விழுந்து எழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சுகாதார துறை சார்பில் ஆய்வாளர் அஸ்வின் தலைமையில் வீடு, வீடாக சென்று பானை ஓடு, டயர், உரல், தேங்காய் ஒடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை கீழே ஊற்றி மருந்து தெளித்து வருகின்றனர்.

குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை விரைவாக அகற்ற வேண்டும் என்று பொதுமககள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story