திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது - மாற்றுத்திறனாளிகள் அவதி


திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது - மாற்றுத்திறனாளிகள் அவதி
x

திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது காரணமாக மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் முருகப்பெருமானை தரிசிக்க மலைக்கோவிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் வசதியாக, கோவில் நிர்வாகம் மூலம் 2 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில் ஒரு பேட்டரி கார் பழுதடைந்து கோவில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பேட்டரி கார் மட்டும் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் இந்தப் பேட்டரி காரும் பழுது ஏற்பட்டு கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நீண்ட தூரம் நடக்கக்கூடிய நிலை உள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் தேர் வீதியில் இருந்து உள்பிரகாரம் மரப்பலகையால் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிவடைந்தும் அதை இன்னும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. எனவே முருகன் கோவில் நிர்வாகம் பழுதடைந்துள்ள 2 பேட்டரி கார்களை விரைவில் சீரமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் விரைந்து தரிசனம் செய்ய மரப்பலகையால் ஆன சாய்தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story