காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை


காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2023 1:00 AM IST (Updated: 18 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அத்திகோட்டை கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியையொட்டி உள்ள அத்திகோட்டை கிராமத்தில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. இந்த யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் அந்த வழியாக சாலைகளில் செல்வோரையும் துரத்துகிறது.

இதனால் விவசாயிகள், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே அத்திகோட்டை கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story