கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள்


கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள்
x

கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். மெல்வின் வங்கி சேவைகளை பற்றி விளக்கி கூறினார். வட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி இயக்கத்தின் வரவு, செலவுகளை வாசித்தார். நிதி உதவி திட்டத் துணைத் தலைவர் ராமையன் திட்ட வரவு, செலவு வாசித்தார். பொதுமக்கள் நலன் கருதி ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், மருத்துவமனை, நகராட்சி வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகிய இடங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் பஸ்சில் சுலபமாக ஏற இறங்க வசதியாக நடைமேடை அமைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story