70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள்


70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள்
x

70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை பெரம்பலூரில் நடந்தது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 21 மாத ஓய்வூதிய தொகையினை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியினை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story